Sunday School – How and when it was Started

Want create site? Find Free WordPress Themes and plugins.

ஓய்வு நாள் பள்ளி, ஆங்கிலத்தில் “Sunday School” or ”Sabbth School“ என்று அழைக்கப்பட்டது. இது 1751-ம் ஆண்டு நாட்டிங்ஹாம்-ல் உள்ள தூய மேரி ஆலயத்தில் துவக்கப்பட்டது.

St.Mary's Church, Nottingham - தூய மேரி ஆலயம், நாட்டிங்ஹாம்
St.Mary’s Church, Nottingham – தூய மேரி ஆலயம், நாட்டிங்ஹாம்

அந்த நாட்களில் குடிசைப் பகுதியில் வசித்து வந்த வேலைக்குச் செல்லும் சிறுவர்கள் சமுதாய வாழ்விலும், சிறந்தவர்களாக வாழவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு அவர்களுக்கு விடப்படும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியத்துக்கு மேல் ஓய்வு நாள் பள்ளி நடத்தப்பட்டன.

இங்கிலாந்து தேசத்திலே 1780-ஆம் ஆண்டு ஓய்வு நாள் பள்ளி துவக்கப்பட்டது. அத்தேசத்தில் துவக்கப்பட்ட நான்காம் ஆண்டு ஒட்டுமொத்த இங்கிலாந்து தேசத்தின் ஓய்வு நாள் பள்ளி பிள்ளைகளின் எண்ணிக்கை 2,50,000 என கணக்கிடப்பட்டது. எனவே 1784-ஆம் ஆண்டு அத்தேசத்தில் மிகவும் சிறப்பான ஆண்டாக பார்க்கப்பட்டது, இந்த நிலை வளர்ந்து 1831-ல் 12 லட்சம் ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Surrey Chapel, Southwark - சூரே சிற்றாலயம்
Surrey Chapel, Southwark – சூரே சிற்றாலயம்
Rowland Hill - திரு. ராவ்லண்ட் ஹில்
Rowland Hill               திரு. ராவ்லண்ட் ஹில்

லன்டனில் 1831-ஆம் ஆண்டு சூரே (Surrey Chapel) என்ற இடத்தில் உள்ள சிற்றாலயத்தில் ”திரு. ராவ்லண்ட் ஹில்“ (Rowland Hill) என்பவரால் ஓய்வு நாள் பள்ளி துவக்கப்பட்டது. United States -ல் 1930-லும், கனடாவில் 1940-லும் துவக்கப்பட்டது. இவ்வாறு ஓய்வு நாள் பள்ளி பல படி நிலைகளைத் தாண்டி இன்று ஓய்வு நாள் பள்ளிகள் இல்லாத திருச்சபைகளைக் காண முடியாது என்ற நிலையில் வளர்ந்து, சமயப் பணியின் அஸ்திவாரமாக இருக்கிறது, மகிழ்ச்சிக்குறியது.

பொதுவாக, ஓய்வு நாள் பள்ளிகளில் திருமறை ஆய்வு, திருச்சபை ஒழுங்கு மற்றும் பொது வாழ்வின் ஒழுக்கம் குறித்து போதனைகள் அளிக்கப்பட்டன. பிள்ளைகள் ஆலய ஆராதனைக்கு இடையூராக இருக்கிறார்கள் என்பதற்காக ஓய்வு நாள் பள்ளி நடத்தப்படாமல் வருங்கால திருச்சபையின் தூண்கள் என்று போற்றப்படும் சிறுவர்கள், பெரியவர்களை மதிப்பதிலும், திருச்சபையின் ஒழுக்கத்தை பேனி காப்பதிலும், இறைவனின் சாயலாக, இயேசுகிறிஸ்துவின் நற்சீடராக வாழ்வதற்குண்டான எதிர்ப்பார்போடே இன்றும் ஓய்வு நாள் பள்ளிகள் நடத்தப்படுகின்றன, நடத்தப்பட எதிர்ப்பார்க்கப்படுகின்றன. இவை ஓய்வு நாள் பள்ளியின் துவக்கங்களில் சில மட்டுமே. ஓய்வு நாள் பள்ளி சிறப்பாக நடைபெற ஜெபிக்க வேண்டுகிறோம்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *